இந்திப்படம் இயக்கும் அட்லீ..

Must read

இந்திப்படம் இயக்கும் அட்லீ..

நடிகர் விஜயை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்ற டைரக்டர்களில் குறிப்பிடத் தகுந்தவர் அட்லீ.

தெறி, மெர்சல், பிகில் என விஜயை வைத்து தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்த அட்லீ, முதன் முறையாக இந்தியில் காலடி எடுத்து வைக்கிறார்.

ஷாரூக்கான் –தீபிகா படுகோனே நடிக்கும் ‘’SANKI’ என்ற படத்தை இயக்க அட்லீ ஒப்புக் கொண்டுள்ளார்.

தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படம் தயாராகிறது. ஷாரூக்கானும்,

தீபிகா படுகோனேவும் முதன் முதலாக ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற படத்தின் மூலம் இணைந்தனர்.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் ஆகிய படங்களிலும் ஷாரூக்கான் – தீபிகா படுகோனே ஜோடியாக நடித்திருந்தனர்.

இருவரும் இணையும் நான்காவது படம் ’சங்கி’.

ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்ட பின் , இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

-பா.பாரதி.

More articles

Latest article