காஞ்சிபுரம்:

த்திவரதர் தரிசனம் 16ந்தேதியுடன் முடிவடைவதாகவும், 17ந்தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவ தாகவும் மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

17ந்தேதி 12மணி வரை தரிசனம் உண்டு என்று நேற்று கலெக்டர் பொன்னையா அறிவித்திருந்த நிலையில், இன்று 16ந்தேதியுடன் தரிசனம் முடிவடையாக அறிவித்து உள்ளது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

40ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் அத்திவரதரை காணு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அணி அணியாக வந்துகொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு 13ந்தேதிமுதல் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அத்திவரதர் தரிசனம் வரும் 16ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாகவும், கடைசி நாளான 17ம் தேதி தரிசனம் ரத்து என்று  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  பொன்னையா அறிவித்து உள்ளார்.

அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்க வேண்டும் என்பதால் 16ம் தரிசனம் நிறைவடையும் என்றும்,  16ம் தேதி இரவு அல்லது 17ம் தேதி அதிகாலை கிழக்கு கோபுர வாயில் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் விஷயத்தில் மாவட்ட நிர்வாகமும், அரசும் பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறது. 

தொடக்கத்தில் அத்திவரதரை தரிசிக்க கட்டணம் என கூறப்பட்டது. பின்னர் அதை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.  பின்னர் தரிசன நேரம் தொடர்பாக அவ்வப்போது புதுப்புதுத் தகவல்களை  அறிவித்து மக்களை குழப்பபியது.

இந்த நிலையில், மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், 16ந்தேதி, 17ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், தமிழக அரசோ, 13ந்தேதி முதல் விடுமுறை என அறிவித்தது.

அதுபோலவே  ஆகஸ்டு 17ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பொதுதரிசன வழியான கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டு மாலை 5 மணியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று (7ந்தேதி) அறிவித்திருந்த நிலையில், தற்போது, 16ந்தேதியுடன் பொதுமக்களுக்கான  தரிசனம் நிறுத்தப்படுவதாக அறிவித்து உள்ளார்.

அத்திவரதர் விஷயத்தில் மாவட்ட நிர்வாகமும், தமிழகஅரசும் மக்களை குழப்பி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.