துந்துலா

ரசின் திருமண நிதியைப் பெற உத்தரப் பிரதேச மாநிலத்தில் சொந்த சகோதரியைச் சகோதரன் மணந்து கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 18 ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேச மாநிலம் துந்துலா பகுதியில் முதல்வரின் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் திருமண விழா நடந்துள்ளது.  இந்த விழாவில் ஒரே நேரத்தில் 51 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.  திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு அரசு சார்பில் ரூ.35 ஆயிரம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த திருமணம் குறித்த படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான போது ஒரு அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.  இவ்வாறு திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி சகோதரன் மற்றும் சகோதரி என்பது தெரிந்து அந்த பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.  இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகள் அந்த கிராமத்துக்குச் சென்று திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் ஆதார் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி உள்ளனர்.  விசாரணையில் திருமணம் செய்து கொண்ட இருவரும் சகோதரர் மற்றும் சகோதரி என்னும் உண்மை வெளியாகி உள்ளது.  அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.