போர்ட்-ஓ-பிரின்ஸ்: ‘ஹைட்டியில் அடுத்தடுத்து ஏற்பட்ட  இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது 2 பேர் பலியாகி உள்ளனர் என்றும் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தென்மேற்கு ஹைட்டியில் 5.3 ரிக்டர் அளவில்  கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கமானது தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே 200 கிமீ (124 மைல்) தொலைவில் உள்ள லெஸ் கேய்ஸ் நகரில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து மேலும் 4.4 மற்றும் 5.1 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது/ இந்த நிலநடுக்கத்தால். 2 பேர் உயிரிழந்தனர். 200 வீடுகள் தரைமட்டமானது.  சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, பொதுமக்கள் வீடுகளுக்கு செல்ல பயந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.