பிரக்யராஜ்:

உ.பி. மாநிலத்தில் பிரக்யராஜ் நகரில் நடைபெற்று  கும்ப மேளாவில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான யாத்ரிகர்கள் கலந்துகொண்டு புனித நீராடி வருகின்றனர்.

இந்த நிலையில், கும்பமேளாவுக்கு நாடு முழுவதும் இருந்த வந்த பக்தர்களின் பேருந்துகளை கொண்டு, ஊர்வலம் நடத்தி புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உ.பி.மாநிலத்தில் உள்ள புனித இடமான அலகாபாத் எனப்படும் பிரக்யராஜ் நகரில் கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஒன்றாகும் திரிவேணி சங்கத்தில் கும்பமேளா விழா கடந்த ஜனவரி மாதம் 15ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  மார்ச் 12ந்தேதி வரை நடைபெற்ற உள்ள விழாவில்  சுமார் 12 கோடி பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கும்பமேளாவுக்கு வந்துள்ள பக்தர்களின் பேருந்துகள் ஒன்றிணைக்கப்பட்டு சுமார்  500 பேருந்துகள் அணிவகுத்து ஊர்வலம் சென்றது. இந்த ஊர்வலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

உ.பி.  நெடுஞ்சாலையில் 500 பேருந்துகளை ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து இயக்கி உத்தரப் பிரதேச மாநில அரசு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே அபுதாபியில் 350 பேருந்துகள் ஒரு ஊர்வலத்தில் கலந்துகொண்டு சென்ற சாதனை தற்போது வரை உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது,  இந்த ஊர்வலத்தில் ஒரே வரிசையாக ஊர்ந்துசென்ற 500 பேருந்துகள் 3.2 கி.மீ.தொலைவுக்கு நீண்டு பழைய சாதனையை இது முறியடித்துள்ளது