அமைச்சர் காமராஜ்க்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று

Must read

சென்னை:
மைச்சர் காமராஜ்க்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ நிலை அறிக்கையில்,
உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ்க்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரது ஜனவரி 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும், அவரது CT ஸ்கேன் இயல்பான நிலையில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், சாதாரமாக ஒரு அறை காற்றில் கிடைப்பெறும் ஆக்சிஜன் அளவே அவருக்கு போதுமானதாக இருக்கிறது. வேறு எந்தவிதமான கூடுதல் ஆக்சிஜனின் துணையும் அவருக்கு தேவைப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article