Skip to content
  • Tue. Sep 8th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
சினி பிட்ஸ் தமிழ் நாடு

தியேட்டர்களில் 100சதவிகித இருக்கை அனுமதி: உயர்நீதிமன்றம் மதுரையில் வழக்கறிஞர்கள் முறையீடு

Jan 7, 2021

மதுரை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் முழுமையாக திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட திரையரங்கள், பின்னர் கடந்த 2020ம்ஆண்டு நவம்பர் மாதம் 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்கப்பட்டன. தொடர்ந்து, 100 சதவிகிதம் திறக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களும், நடிகர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துவந்தனர். இதையடுத்து, பொங்கலுக்கு 100 சதவீதமாக உயர்த்திக்கொள்ள தமிழகஅரசு அனுமதி வழங்கி  உத்தரவிட்டது. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு குரல்களும் தொடர்ந்து எழுந்து வந்தன.
மருத்துவ நிபுணர்கள் அரசின் உத்தரவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மத்தியஅரசும் தமிழகஅரசின் அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்திஉள்ளது. இந்த நிலையில்,  தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.
தமிழகஅரசு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை செயல்பட அனுமதி அளித்துள்ளது  பேரிடர் விதிக்கு எதிரானது. 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவக் குழு அனுமதி தரவில்லை. எனவே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வு முன் நாளை விசாரணைக்கு வருகிறது.

Post navigation

அமைச்சர் காமராஜ்க்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று
மாஸ்டருக்கே முன்னுரிமை: தியேட்டர் உரிமையாளர்கள்

Related Post

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

தமிழ் நாடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? 25 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த TNHB, சென்னை மாநகராட்சி அனுமதி

இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

உலகம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer