வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன் .இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இந்த படத்தில் சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா உள்பட பலர் நடித்து வருகின்றனர் . மேலும் ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் அப்பா, மகன் என டபுள் ரோலில் நடிக்கிறார் தனுஷ். இத்திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க நடிகை சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு நடிகர் ‘நவீன் சந்ரா’, தனுஷுக்கு வில்லனாக இந்த படத்தில் நடிக்க உள்ளார், என சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.