விஜய் டிவி நடத்தும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸில் வனிதா மற்றும் கஸ்தூரி வெளியேறிவிட்டனர் . இருப்பினும் அவர்கள் இருவரின் பனி போர் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது . இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் கஸ்தூரியை வனிதா ட்விட்டர் பக்கத்தில் ப்ளாக் செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

வனிதா லாஸ்லியா குறித்து பதிவிட்டுள்ளார் . அதை விமர்சனம் செய்யும் வகையில் கஸ்தூரி தனது ட்வீட்டில், ‘என்ன தான் லோஸ்லியா வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாகப் பழி போடுவது? விட்டுருங்கம்மா’ என்று கூறி வாத்து எமோஜியை குறிப்பிட்டுள்ளார்.

இதை நெட்டிசன் ஒருவர் வனிதாவை டேக் செய்து பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .அதைப் பார்த்துக் கடுப்பான வனிதா, ‘உனக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால் உன்னைப் பற்றி குறிப்பிட இணையத்தில் ஒரு எமோஜி கூட இல்லை. அதனால் அந்த இடத்தை வெறுமையாக விடுகிறேன்’ என்றார்.

இதற்கு பதில் செய்த கஸ்தூரி, ‘அன்பான வனிதா. உன்னை போல் வார்த்தைகளைப் பயன்படுத்த இந்த இணையத்தாலேயே முடியவில்லை. இந்த வார்த்தை போரில் ஜெயித்துவிட்டதாக நினைத்து உனக்காக நீயே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்’ என்று விடாமல் வனிதாவை வம்பிழுத்து கொண்டே இருந்தார்.

இதனால் கோபமடைந்த வனிதா கஸ்தூரியை ட்விட்டரில் ப்ளாக் செய்துள்ளார் .