மதுரை:

மைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை மார்ச் 12-ந்தேதி உயர்நீதி மன்றம் மதுரை கிளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஏற்கனவே பால் தரம் குறித்து தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தி, பின்னர் கோர்ட்டு உத்தரவு காரணமாக வாயை மூடி மவுனமானார்.

இந்நிலையில், அவர் அமைச்சரான பிறகு, வருமானத்தைவிட அதிக அளவிலான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக மகேந்திரன் என்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் தொடர்பான  வழக்கில் அரசு  அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 12ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.