சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக துணை முதல்வர்: ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல் வத்திடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

மேலும் பட்ஜெட் குறித்த கேள்விக்கு, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வரும் நிதி நிலை அறிக்கை இருக்கும் என்றும், மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டது துயரச் சம்பவம் என்றவர்,  தெரிவித்தார்.  மாணவ, மாணவிகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.