சென்னை:
மிழக சட்டசபை கூட்டம்  கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மானிய கோரிக்கை பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
jeya stand
கடந்தவாரம் சட்டசபையில் ஏற்பட்ட அமளி காரணமாக எதிர்க்கட்சியாக திமுக ஒரு வாரம் காலம் அவைத்தலைவரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதன் காரணமாக நாளைய கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக திமுக பங்கேற்கும் நிலை இல்லை என்பது தெளிவாகிறது.
தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது. போலீசார் சரியான நடவடிகை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தமிழக அரசு மீது அதிருப்தியான நிலையில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நாளை காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. காரசாரமாக நடைபெறும் என எதிர்பார்த்த இந்த காவல்துறை மானிய கோரிகை விவாதத்தில் திமுகவை சேர்ந்த முக்கியமான உறுப்பினர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால், எஞ்சியிருக்கும் ஒரு சில திமுக உறுப்பினர்கள் என்ன பேசப்போகிறார்கள் என அனைவருக்கும் எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
இதுகுறித்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறும்போது, ஆளும் கட்சியினர் எங்களை காவல்துறை மானிய கோரிக்கையில் பங்கேற்க முடியாதவாறு, வேண்டு மென்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறோம் என்று கூறியது நினைவிருக்கலாம்.
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதங்களுக்கு காவல்துறைக்கு பொறுப்பு வகித்துவரும்  முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேச இருக்கிறார்.
திங்கள்கிழமை காலை கேள்வி நேரம் இல்லை என்பதால், பேரவை தொடங்கியவுடன் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்  ஆரம்பமாகும் என தெரிகிறது.
கடந்த 2 நாட்களாக திமுகவை சேர்ந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்து போட்டி சட்டசபை கூட்டம் போன்ற  ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோல நாளையும் ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடுவார்களா? அதனால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ என்று போலீஸ் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் மீது சட்டசபை வளாகத்தில் அனுமதியின்றி கூடி பிரச்சினை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையொட்டி நூற்றுக்கணக்கான  போலீசார்  தலைமைச் செயலக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.  தலைமைச் செயலகத்துக்குள் உள்ளே நுழையும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சட்டசபை நாளை களை கட்டும் என தெரிகிறது.