திஸ்புர்: பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக பவன் கேராவை டெல்லி விமான நிலையத்தில் இருந்து அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறை தலைவராக இருப்பவர் பவன்கெரா, இவர், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக,   டெல்லி விமான நிலையத்தில், ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பின்னர் விமான நிலையத்தின் டார்மாக்கில் இருந்து  அசாம் போலீசாரால்  கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக டெல்லி விமான நிலையத்தில், இண்டிகோ விமானத்தில்  பவன் கேரா உள்பட , காங்கிரஸ் தலைவர்கள் ராய்ப்பூருக்குச் செல்ல இருந்த  விமானத்தில் ஏறிய நிலையில், பவன்கெரா விமானத்தில்  இருந்து இறக்கப்பட்டார்.

காவல்துறையினரால், சில லக்கேஜ் பிரச்சினை என கூறி  பவன் கேராவை விமானத்தில் இருந்து வெளியே வரச் சொன்னார்கள். கைப்பையைத் தவிர தன்னிடம் சாமான்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகளிடம் கூறினார். ஆனால், அதற்குள் டெல்லி காவல்துறை மற்றும் அசாம் காவல்துறை இருவரும் விமான நிலையத்தை அடைந்தனர்,

அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு டார்மாக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,  விமானம் புறப்படுவது தாமதமானதால், விமானத்தின் மற்ற பயணிகளை இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தொடர்ந்து, மற்ற பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பவன்கெரா கைது தொடர்பாக வெளியான செய்தியில்,  அஸ்ஸாம் காவல்துறையினர், ஹஃப்லாங் காவல் நிலையத்தில் பவன் கேராவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க ஒரு குழு டெல்லி சென்றதாகவும், அந்த குழுவே அவரை கைது செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உளளது.

டெல்லி விமான நிலையத்தில் டெல்லி போலீஸ் மற்றும் அசாம் காவல்துறை மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா ஆகியோர் பங்கேற்ற பல மணிநேர நாடகத்திற்குப் பிறகு, அஸ்ஸாம் போலீசார் கேராவை விமான நிலைய டார்மாக்கில் இருந்து கைது செய்ததாக காங்கிரஸ்  தெரிவித்து உள்ளது.

கைது செய்யப்பட்ட பவன்கெரா, உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு அவரை அஸ்ஸாமுக்கு அழைத்து வருவோம்” என்று ஐஜிபி எல்&ஓ & அசாம் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த குமார் புயான் செய்தி நிறுவனத்திடம்  தெரிவித்தார்.

பவன் கேரா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் மற்றும் போக்குவரத்து காவலில் அஸ்ஸாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று செய்தி நிறுவனம்  என்என்ஐ  தெரிவித்துள்ளது.

தான் கைது செய்யப்பட்டது குறித்த பவன்கெரா,  பார்ப்போம், இது ஒரு நீண்ட போர்” என்று அசாம் காவல்துறையால் அழைத்துச் செல்லப் பட்ட பவன் கேரா கூறினார்.

இதுகுறித்து கூறிய காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், காவல்துறை எந்த ஒரு வாரண்ட், எஃப்ஐஆர் எதையும் தாக்கல் செய்யவில்லை, ஆனால் இது முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் உத்தரவின் பேரில் நடந்ததாகக் கூறியவர்,  “ஹிமந்த பிஸ்வா சர்மா கடவுளா?” என கேளவி எழுபிபினார்.

“பவன் கெராவின் நாக்கை நழுவவிட்ட சில வார்த்தைகளுக்காக அவரை கைது செய்கிறீர்களா? நேருவின் பெயரை ஏன் பயன்படுத்தவில்லை என்பது போன்ற அவதூறான வார்த்தைகளை வீசும் பிரதமர் மோடியை முதலில் கைது செய்ய வேண்டும் என கூறிய சுப்ரியா ஷிரினேட், “அஸ்ஸாம் போலீசார் பவன் கேராவை கைது செய்கிறார்கள். ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவும் அவரிடம் செல்கிறார். அட்டூழியங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத அதே அஸ்ஸாம் காவல்துறை. இந்த காவலில் வைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று நான் கேட்க விரும்புகிறேன் என்றவர்,  இது சர்வாதிகாரம் இல்லை என்றால். , அப்புறம் என்ன?” காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷிரினேட் கேள்வி எழுப்பினார்.