கவுகாத்தி:

நாடு முழுவதும் என்ஆர்சியை அமல்படுத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் ஏற்கனவே கண்கெடுப்பு நடத்தப்பட்ட தரவுகள் (Data) திடீரென மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ஆர்சி தரவுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிளவுட் ஸ்டோரேஜ் சர்வரின் சந்தா காலம் முடிவடைந்த நிலையில், அதற்கான ஒப்பந்தத்தை விப்ரோ நிறுவனத்துடன் புதுப்பிக்க தவறியதால், அந்நிறுவனம்  தரவுகளை எடுக்க முடியாத நிலையைஉருவாக்கி இருப்பதாக  கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம்,  என்ஆர்சி தரவுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், சில தொழில்நுட்ப கோளாறு காரணாமக கிளவுடில் அது தென்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. சுமார் 1800 கோடிகள் மதிப்பிலான செலவில் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டு, ‘www.nrcassam.nic.in’  என்ற இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் இறுதி தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பாக  வைக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த பதிவுகள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், என்ஆர்சி தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், சில தொழில்நுட்ப கோளாறு காரணாமக கிளவுடில் அது தென்படவில்லை. இந்த தரவுகள் அனைத்து  ஐடி நிறுவனமான விப்ரோ மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் 19 வரை இருந்ததாகவும், அது புதுப்பிக்கப்படாத நிலையில், தரவுகள் மாயமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறியுள்ள என்ஆர்சி ஒருங்கிணைப்பாளர்  ஹிதேஷ் சர்மா, இது தொடர்பாக கடந்த ஜனவரி 30ம் தேதி நடந்த மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தேவையான நடவடிக்கைகளைச் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக பிப்ரவரி முதல் வாரத்தில் விப்ரோவுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்தவர்,  “விப்ரோ தரவுகளை மீண்டும் நேரலை செய்தவுடன், அது பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றும், அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் சரி செய்யப்பட்டு விடும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

And govt wants NRC in entire country…?? If politically the data is not favourable delete the data itself…1600 Crores spent only to delete the data later…