டில்லி

சாம் மற்றும் மிசோரம் எல்லை மோதலால் பாஜக தனது முதல்வர்களைக் கட்டுப்படுத்த தவறுவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் இடையே எல்லைப் பிரச்சினை வெகு நாட்களாக இருந்து வருகிறது.   இது ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆரம்பித்ததாகும்.  அசாம் மாநிலத்தில் ஒரு பகுதியாக மிசோரம் இருந்தது.  அசாம் மாநிலத்தில் லுஷாய் ஹில்ஸ் என்னும் பெயரில் மாவட்டமாக இருந்து அதன் பின்னர் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.

அசாம் மாநிலத்துடன் சுமார் 165 கிமீ எல்லைப்  பகுதியை மிசோரம் பகிர்ந்து கொள்கிறது.  மிசோரமின் ஐஸ்வால், கோலாசிப், மமித் ஆகிய 3 மாவட்டங்கள் இதில் அடங்கும்.  இந்த எல்லையில் அசாம் மாநிலத்தின் கச்சார், கரிம் கஞ்ச் மற்றும் ஹைலா காந்தி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.

இரு மாநிலங்களுக்கிடையே அடிக்கடி எல்லை தகராறு நடந்து வருகிறது.   முன்பு காடுகளாக இருந்த வரை அதிக மோதல்கள் நிகழாத நிலையில் தற்போது அப்படி இல்லை என்பதால் மோதல்கள் அதிகரித்துள்ளன.  அசாமுக்கு ஏற்கனவே அருணாசலப் பிரதேசம் நாகாலாந்து ஆகிய மாவட்டங்களுடனும் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இரு மாநில எல்லையில் உள்ள காவல்துறையினருக்கு இடையே மோதல் நிகழ்ந்துள்ளது.  அசாம் காவல்துறையினர் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.  மிசோரம் காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இந்த மோதலில் 5 காவலர்கள் உயிர் இழந்துள்ளனர்.

இது குறித்து அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா மற்றும் மிசோரம் முதல்வர் ஜொராம் தங்கா இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.  இருவருமே பாஜகவினர் ஆவார்கள்   இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இருமாநில முதல்வர்கள் உள்ளிட்ட 7 முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

அப்போது அவர் அசாம் மற்றும் மிசோரம் எல்லை பிரச்சினைகளைக் குறித்து விவாதிக்குள்ளார்.   ஆனால் இந்த சந்திப்பு நடந்த அடுத்த நாளே இரு மாநில காவல்துறைக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.  எனவே பாஜக தனது முதல்வர்களைச் சரியாக கட்டுப்படுத்த தவறி உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர்.