அசாம் வெள்ள நிவாரண நிதி அமைச்சர் சுற்றுலாவுக்கு மாற்றம்

Must read

வுகாத்தி

சாம் மாநிலம் வெள்ளத்தால் தவித்து வருகையில் நிவாரண நிதியை அமைச்சரின் சுற்றுலாவுக்கு பிரம்மபுத்திரா ஆணையம் மாற்றி உள்ளது.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் மூழ்கி சுமார் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் 5 காண்டாமிருகங்கள் உள்ளிட்ட 20 விலங்குகள் மரணம் அடைந்துள்ளன.

இந்த வெள்ளப் பெருக்குக்கு ஏற்படாமல் தடுக்க கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளது.  இதன் செலவு குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வினா ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், “பிரம்மபுத்திரா வாரியத்துக்கு வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் உலகின் நதித் தீவுகளில் பெரிய தீவான மஜுலியில் நடந்தது. இந்த விழாவில் கலந்துக் கொள்ள வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அவர் குடும்பத்தினருக்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.  இதற்கான செலவுகள் இந்த நிதியில் இருந்து மாற்றப்பட்டுள்ளன.

நிதின் கட்கரியுடன் அவருடைய குடும்பத்தினர் சுற்றுலா வந்ததால் அவர்கள் வந்து செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு மொத்தம் நான்கு நாட்களுக்கு ரூ.62,96,652 செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்த பணியும் இதுவரை முடிவடையாமல் உள்ளது. பிரம்மபுத்திரா ஆணையத்துக்கான கட்டிட வேலைகள் இன்னும் தொடங்காத நிலையில் உள்ளது. மேலும் வெள்ளத்தைத் தடுக்கவும் ஆற்றின் நில அரிப்பைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் சர்வே செய்யப்பட்டதோடு நின்று விட்டன.

More articles

Latest article