டில்லி,

புதிய 200 ரூபோய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த புதிய ரூபாய் ஏடிஎம் இயந்திரத்தில் கிடைக்காது என்றும், வங்கிகளில் மட்டுமே கிடைக்கும் வகையில் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மத்தியஅரசு கருப்பு பணம், கள்ளநோட்டுகள் பிரச்னையை ஒழிக்கும் நோக்கில் திடீரென ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது.

இதையடுத்து, ரூ.2000 நோட்டுகள் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் வழியாகப் புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால் நோட்டு தட்டுப்பாடு காரணமாக 3 மாதம் வரை கடும் பணத்தட்டுப்பாடு நிலவியது.

அதைத்தொடர்ந்து பணத்தட்டுபாட்டை போக்கும் வகையில்,  ரூ.10, ரூ.50 நோட்டுகளை புழக்கத்தில் விட்டது.

தற்போது அதேபோன்று புதிய ரூ.200 நோட்டுகளை அச்சடித்துள்ள ரிசர்வ் வங்கி, அவற்றை விரைவில் வங்கி கிளைகள் வழியாகப் புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளது.

இந்த புதிய நோட்டுக்கள்  ஜூன் மாதத்தில் இருந்து  பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படலாம் என கூறப்படுகிறது.