மாநிலங்களவை ஒத்திவைப்பு : முத்தலாக், குடியுரிமை சட்டம் நிறைவேறவில்லை

டில்லி

நாடாளுமன்ற மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் முக்கிய மசோதாக்களான முத்தலாக் தடை மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றபடவில்லை.

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரி இறுதி நாளான இன்றுடன் மக்களவை தொடர் முடிவாடைந்தது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இது இந்த ஆட்சிக் காலத்தின் கடைசி கூட்டம் என்பதால் இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டி மாநிலங்களவை மேலும் இரு நாட்கள் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று மதியம் 12.50 மணிக்கு இந்த கூட்டத்தொடர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு இன்றைக்குள் இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்து பல முயற்சிகள் எடுத்து வந்தது. ஆயினும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டதால் இந்த மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் போய் உள்ளது.

அடுத்த தொடர் மக்களவை தேர்தல் முடிந்த பிறகு புதிய ஆட்சி அமைந்த பிறகு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Budget session, citizenship amendment bill pending, Rajya sabha adjourned, triple talak pending, குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நிதிநிலை கூட்டத்தொடர், நிறைவேறாத மசோதாக்கள், மாநிலங்களவை ஒத்தி வைப்பு, முத்தலாக் தடை மசோதா
-=-