வேட்பு மனுவின்படி மெதுவாக வயது ஏறும் பீகார் துணை முதல்வர்

Must read

பாட்னா

பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்துக்குத் தேர்தல் வேட்பு மனுவின்படி வயது மிகவும் மெதுவாக அதிகரித்துள்ளது.

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல்.   ஆனால் பீகார் முதல்வருக்கு ஒரு வயது ஆக ஒவ்வொரு முறையும் பல வருடங்கள் ஆகி உள்ளது.   இது பலருக்கு வியப்பை அளிக்கலாம்.   ஆனால் அவர் அளிக்கும் வேட்பு மனுவில் அவ்வாறு விவரம் காணப்படுகிறது.

வேட்பு மனுவின் படி

  • கடந்த 2005 ஆம் வருடம் தர்கிஷோர் பிரசாத்துக்கு 48 வயதகை இருந்தது.
  • ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு வயது அதிகரித்து 49 வயது ஆனது.
  • மேலும் 5 வருடங்கள் கழித்து அதாவது 2015 ஆம் வருடம் அவருக்கு 3 வயது அதிகரித்து 52 வயதானது
  • கடந்த  5 வருடங்களில் அதாவது 2020ல் அவருடைய வயதுகிடுகிடுவென 12 வருடங்கள் அதிகரித்து தற்போது 64 வயதாகி உள்ளது.

இது குறித்த தகவல் டிவிட்டரில் பலராலும் பரப்பப்பட்டு அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தி உள்ளது.

More articles

Latest article