ஊரடங்கால் வேலை இல்லை : தெரு தெருவாக டீ விற்கும் வழக்கறிஞர்..

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிறந்தவர் சையத் ஹாரூன். சின்ன வயதிலேயே அவரது குடும்பம் ஈரோட்டுக்குக் குடி பெயர்ந்து விட்டது.

அங்குப் பள்ளிப்படிப்பை முடித்த அவர் சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார்.

சென்னை  உயர்நீதிமன்றத்திலும், பின்னர் டெல்லியில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளதால்,குடும்பத்தோடு ஈரோட்டுக்கு வந்து விட்டார்.

70 வயதான ஹாரூன், சம்பாதித்த பணத்தில் எதுவும் சேமிக்க வில்லை.

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இன்று ஈரோட்டில் தெருத்தெருவாக  சைக்கிளில் சென்று டீ விற்று வருகிறார்.

வழக்கறிஞராக இருந்த போது சையத் ஹாரூன் மாதம் 60 ஆயிரம் சம்பாதித்து வந்தார்.

’’டீ வியாபாரம் ‘ மூலம் தினமும் 500 ரூபாய் கிடைக்கிறதாம்.

-பா.பாரதி.