சென்னை

சென்னை நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளில் 55% அறைகள் தங்குவாரின்றி காலியாக உள்ளன.

சென்னை நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான நட்சத்திர விடுதிகள்  உள்ளன. இதற்கு முக்கிய காரணம் சென்னை நகருக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வர்த்தகப் பயணிகளும் அதிகமான அளவில் வருவது ஆகும். இதனால் இங்குள்ள நட்சத்திர விடுதிகளில் பல நேரங்களில் தங்குவதற்கு அறை கிடைக்காத நிலையில் விளங்கும். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் மொத்தம் சுமார் 10,000 அறைகள் உள்ளன.

ஆனால் கடந்த ஆறு மாதங்களாக இந்த விடுதிகளில் தங்குபவர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரலில் தொடங்கிய இந்த சரிவு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. சமீபத்திய நிலைப்படி 15% காலியாக இருந்த அறைகளின்  எண்ணிக்கை தற்போது 55% ஐ எட்டியுள்ளது. இது விடுதி உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து தென் இந்திய விடுதிகள் சங்க செயலர் நடராஜன். “சென்னையில் தற்போது வர்த்தகம் குறித்து பயணம் செய்வோர் மிகவும் குறைந்துள்ளனர். இந்த விடுதிகள்  பெரும்பாலும் இத்தகையோரஒ நம்பியே உள்ளன. தற்போது சமூக விழாக்களுக்கும், மருத்துவச் சிகிச்சைக்காகவும் வருபவர்கள் மட்டுமே உள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.