ஓய்வுபெறும் தன் டிரைவருக்கு கலெக்டர் தந்த இன்ப அதிர்ச்சி

Must read

திகம்பர் தக் (வயது 58) மஹாராஷ்டிராவின் அகோலா மாவட்ட கலக்டர்களுக்கு கடந்த 35 ஆண்டுகாலம் வாகன ஓட்டுநராக பணியாற்றியவர். தானது சேவைநாட்களில் இதுவரை 18 கலெக்டர்களைப் பார்த்தவர். அன்று அவருக்குபணி ஓய்வுபெறும் நாள். அலுவலகத்தில் அவருக்கு பிரியாவிடை கொடுக்க ஃபேர்வெல் நிகழ்ச்சிகள் தடபுடலாக ஏற்பாடாகிக் கொண்டிருந்தன.

collector

தன் நம்பிக்கைக்குரிய ஓட்டுநருக்கு ஒரு மறக்கமுடியாத பரிசைக் கொடுக்க அகோலா மாவட்ட கலெக்டர் ஶ்ரீகாந்த் முடிவு செய்தார். தனது காரை அழகாக அலங்கரித்து அதில் திகம்பரை அமர வைத்து கலெக்டர் காரை ஓட்டிக்கொண்டு அலுவலகம் வந்தார். திகம்பர் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்.
35 ஆண்டுகளாக திகம்பர் செய்த சேவையை கெளரவிக்கும் பொருட்டும், அவர் தன்னைப்போன்ற மாவட்ட பல ஆட்சித்தலைவர்களின் பயணங்களின் பாதுகாப்பை அனுதினமும் உறுதி செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டும் அவருக்கு இந்த நினைவுப் பரிசை தான் அளிக்க விரும்பியதாக கலெக்டர் ஶ்ரீகாந்த் தெரிவித்தார்.

More articles

Latest article