கழுதைகள் தோலுக்காக வேட்டையாடப்படுவதால் எண்ணிக்கையில் 61% குறைந்துள்ளன.

Must read

டில்லி

ழுதைகள் தோலுக்காக வேட்டையாடப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை 61% குறைந்துள்ளது.

இந்தியாவில் கழுதைகள் பொதி சுமக்க பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தன.  ஒவ்வொரு தெருவிலும் அதிக அளவில் காணப்பட்ட கழுதைகள் கடந்த சில காலமாகக் கண்களில் தென்படுவது அபூர்வமாகி உள்ளது.   கழுதைகள் குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சர்வதேச தொண்டு நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

இந்த ஆய்வ்ய் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த முடிவின் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2019ஆ, ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கழுதைகளின் எண்ணிக்கை 61% குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.  இதற்கு அவற்றின் பயன்பாடுகள் குறைந்தது,  திருடப்படுதல், இறைச்சி மற்றும் தோலுக்காக வேட்டையாடுதல் மேய்ச்சல் நிலம் குறைவு ஆகியவை காரணங்களாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் மகாராஷ்டிரா, குஜராத், பீகார், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் கழுதைகள் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.   மேலும் இந்தியக் கழுதைகளை தோலுக்காகச் சீனா உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.  இதற்கு ஆதாரமாகச் சீனர் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமக்கு மாதத்துக்கு 200 கழுதைகள் வேண்டும் என ஆர்டர் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article