ராணிப்பேட்டை

ந்திர மாநிலத்தில் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதால் பாலாற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  இதனால் கலவகுண்டா அணை நிரம்பி உள்ளது.  இதையொட்டி தற்போது விநாடிக்கு 4500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.   இதையொட்டி ராணிப்பேட்டையில் பொன்னையாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.   இதையொட்டி பொன்னையாறு அணைக்கட்டில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்படுவதால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

பாலாற்றின் கரையோரம் வசிக்கும் மருதம் பாக்கம், ஏகாம்பர நல்லூர், கொண்ட குப்பம், சீக்கராஜபுரம், நரசிங்க புரம், லாலாப்பேட்டை, தெங்கால் , காரை உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.  இந்த கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நதிக்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் யாரும் ஆற்றைக் கடக்கக் கூடாது எனவும் யாரும் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது எனவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.