தற்கொலை செய்துகொண்ட கலிகோபுல் யார்? முழுமையான பொலிட்டிக்கல் ஸ்டோரி

Must read

இடாநகர்,
ருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கலிகோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
bull_2745641f
 
அருணாச்சல பிரதேசத்தின் 8-வது முதல்வரான கலிகோ புல் குக்கிராமத்தில் பிறந்து அரசியலில்  பிரபலமானவர். பழகுவதற்கு எளிமையானவர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள  அன்ஜா மாவட்டம் வால்லா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்  கலிகோ புல். பட்டதாரி ஆவார்.
pull-6
காங்கிரஸ் கட்சி மீது ஏற்பட்ட பற்றுதல் காரணமாக  1995ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அவரது ஆர்வம் மற்றும் சுறுசுறுப்பை  கண்ட காங்கிரஸ் தலைவர்கள்  அவருக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தனர். அவர்  அரசியலில் நுழைந்த அதே  ஆண்டில் தேர்தலில் போட்டியிட்டு  ஹயூலிங் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் காரணமாக  காங்கிரஸ் முதல்வர் முகுத் மித்தி அரசில் நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. நிதித்துறை அமைச்சராக திறம்பட பணி செய்தார்.
pull-4
நிதி, நீதி, சுகாதாரம், மகளிர்-குழந்தைகள் நலம், மீன்வளம் என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் திறம்பட பதவி வகித்தவர்.
அவரது சொந்த தொகுதியான ஹயூலிங் தொகுதியில் 5 முறை  போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
pull-3
முதல்வர்  நபம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி  அருணாசல பிரதேசத்தில் நடைபெற்றது. மொத்தம்  60 உறுப்பினர்கள் உள்ள சட்டபேரவையில் 44 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசை சேர்ந்தவர்கள்.
முதல்வருக்கும், புல்லுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கலிகோபுல் காங்கிரசில் இருந்து  தனியாக பிரிந்தார்.  அவருக்கு 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  ஆதரவு கொடுத்தனர். மேலும் எதிர்க்கட்சியான  பாஜகவும்  ஆதரவுக் கரம் நீட்டியது.
pull-2
இதன் காரணமாக அருணாச்சல பிரதேசத்தில்  அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதனால் குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. குழப்பத்திற்கு பாரதிய ஜனதா காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
அருணாசல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது,  இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் பாரதியஜனதாவின் இந்த செயலை வன்மையாக கண்டித்தனர்.
குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு, ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதனால் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, பெரும்பான்மை ஆதரவு இருந்ததால் அன்றிரவே கலிகோ புல் புதிய முதல்வராகப் பதவியேற்றார்.  ஆளுநர் ராஜ்கோவா கலிகோ புல்லுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
 
pull-5
இதை எதிர்த்து, முன்னாள் முதல்வர்  நபம்துகி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அருணாசலபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது என்றும் மாநிலத்தில் நபம்துகி தலைமையிலான காங்கிரஸ் அரசே தொடரவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. கலிக்கோ புல்லின் ஆட்சி சட்டவிரோதமானது என்றும் தீர்ப்பில் கூறியிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் கலிக்கோ புல் சில வாரங்களுக்கு முன் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.    அவருக்கு வயது 47. பிப்ரவரி மாத இறுதியில் பதவி ஏற்ற புல் ஜூலை மாத இறுதியில் பதவியை ராஜினாமா செய்தார். பாரதிய ஜனதா ஆதரவினால் முதல்வராக  இருந்த கலிக்கோ புல் 6 மாதங்கள்  மட்டுமே முதல்வர்  பதவியில் நீடித்திருந்தார்.
pull
இதையடுத்து, அவமானம் காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார்.  தொடர்ந்து மனஅழுத்தத்துடன்  காணப்பட்டதாகவும், அவரது வீட்டில் கலிக்கோ புல் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இட்டாநகரில் அவரது வீட்டில்  தூக்கில் தொங்கிய அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது காங்கிரசை சேர்ந்த பிமா காண்டு முதல்மந்திரியாக ஆட்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article