டெல்லி:
ற்கொலை செய்வது குற்றம் அல்ல என்பதற்கான சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டப்படி, தற்கொலை முயற்சி செய்வோர் பிரிவு 309ன்கீழ் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.  அவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.
இதை தவிர்க்கும் பொருட்டு, தற்கொலையை குற்றமாக கருதாமல், மனஅழுத்தம், வாழ்க்கையில் விரக்தி போன்று பார்த்து, அதை தீர்க்கும் வகையில்  திருத்தம் கொண்டுவரப்பட்டு அது ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ளது.

மத்திய உள்துணை இணைஅமைச்சர்
மத்திய உள்துணை இணைஅமைச்சர்

மத்திய சட்ட கமிஷன் அளித்த பரிந்துரையை ஏற்று, இத்த திருத்த மசோதா கொண்டு வந்ததாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிவு  கூறினார்.
தற்கொலை முயற்சி செய்வோரை மன அழுத்த பாதிப்புள்ளோர் என கருதி, உரிய சிகிச்சையும், அரவணைப்பும் அளிக்க புதிய சட்ட திருத்தம் வகை செய்கிறது.