இடா நகர்:

ருணாச்சலபிரதேசத்தில் 191 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த போதை பயிர்கள் தீவைத்து கொளுத்தப்ப
ட்டன.
அருணாச்சல பிரதேச மாநிலம் திராப் மாவட்டத்திலிருக்கும் லாசு, சன்லியம், போங்காங், சின்னு, லோயர் சின்ஹான், அப்பர் சின்ஹான் உள்ளிட்ட ஏராளமான கிராமப்பகுதிகள் உள்ளன. இங்குள்ள விவசாய நிலங்களில் அபின் தயாரிக்கப் பயன்படும் பப்பாளி விதைகள் பயிரிடப்பட்டிருப்பதாக போதை தடுப்புப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசாரும், எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்களும் இந்தக் கிராமப் பகுதிகளில் கடந்த 14 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதி விவசாயிகள் அபின் தயாரிக்கப்பயன்படும் பப்பாளி விதை பயிரிடப்பட்டிருப்பதை போலீசார் ஊர்ஜிதம் செயதனர். இதையடுத்து போதை தடுப்புப் பிரிவு போலீசாரும்,
எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்களும் அந்த போதை பயிர்களை நெருப்பு வைத்துக்கொளுத்தினர்.

விவசாயிகள் யாரும் கைது செய்யப்படவில்லை, போலீசார் தீவிர விசாரணை
நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவி்க்கிறது.