டெல்லி:

காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய தொழிலதிபரை பற்றிய செய்திதான் தற்போது சமூக வலைதளப்பகுதியில்
அதிகம் பேசப்படுகிறது.

தொழில் நிறுவனம் நடத்துவோர் தங்களது உற்பத்திப் பொருள்களை அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய வித்தியாசமான முறையில்
விளம்பரங்களை வெளியிடுவார்கள். நடப்பு நிகழ்வுகளையும் சமகால தொழில் நுட்பத்தையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் ஒரு சில தொழிலதிபருக்கு உண்டு. அந்த வகையில்
டெல்லி இளம்தொழிலதிபர் காதலர் தினத்தை வித்தியாசமாக விரும்பினார்.
இவர் காதலர் தினத்துக்கு முன் அதாவது கடந்த 11 ம் தேதி தனது முகநூலில் 14 ந்தேதி காதலர் தினத்தன்று
“என்னுடன் கொண்டால் தனது ஆடி காரில் பயணிக்கலாம், புதிய ஐ போன் 7 தரப்படும், குர்கானில் உள்ள ஓபராய் நட்சத்திர ஹோட்டலில் விருந்து தரப்படும் மற்றும் மறக்கமுடியாத
நினைவுப்பரிசுகளும் தரப்படும்” என்று எழுதியிருந்தார்.

இதைப்பார்த்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான இளம்பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். 14 ம் தேதிக்குள் இவர்களில் 5 பேரை
தேர்வு செய்து கொண்டாட முடியாது என்பதால் 17ம் தேதி ஓபராய் ஓட்டலில் கொண்டாட தீர்மானித்தார்.
தேர்வு செய்யப்பட்ட 5 பெண்களை ஓபராய்க்கு வரவழைத்து அவர்கள் திகட்ட திகட்ட விருந்தும்
அளித்தார். அந்த விருந்துக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவழித்த தொழிலதிபர், 5 பெண்களுக்கும் ஐ-போன்-7 கொடுத்து மகிழ்ந்ததோடு அவரது ஆடி காரில் இளம்பெண்களை அழைத்துச் சென்று மகிழ்வித்தார்.