கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூக வலைதளம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

சினிமா துறையில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தாலும் தனது சொந்த முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து முன்னுக்கு வந்துள்ளார் அருண் விஜய்.

சமீபத்தில் நடிகர் அருண் விஜய் புது கெட்டப்புக்கு மாறி இருந்தார். ஹாலிவுட் திரைப்படமான வால்வரின் பட ஹீரோ போல இருந்தார்.

இந்நிலையில் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை செய்துள்ளார் அருண்விஜய். அதில் அப்பா நீங்க தான் என் சூப்பர்ஹீரோ. உங்களை போல் ஒருவர் கிடைக்க நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். லவ் யூ அப்பா என வாழ்த்தி புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.