சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண்ராய் ஐஏஎஸ் நியமனம் செய்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை கலெக்டர் உள்பட 4 மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்ட நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண்ராய் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடத்து, சென்னை மாவட்ட ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராக ஹனிஷ் சாப்ரா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையராக நந்தகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஊரக மேம்பாட்டுத் திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண்ராய் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் ஒன்றிய அரசின் பணிக்குச் சென்ற நிலையில் அருண்ராயை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
[youtube-feed feed=1]