அகமதாபாத்:

குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும் 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் குஜராத் மாநில தேர்தல் அறிக்கையை அருண் ஜெட்லி இன்று வெளியிடு பேசுகையில், ‘‘குஜராத் மாநில அரசு சிறப்பாக செயலபட்டு வருகிறது. அது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டிய தேவை இல்லை. பொருளாதார வளர்ச்சியில் குஜராத் முதலிடம் வகித்து வருகிறது’’ என்றார்.

தேர்தல் அறிக்கையில்,‘‘ பா.ஜ.க. ஆட்சியில் குஜராத் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. உலக வளர்ச்சியின் கலங்கரை விளக்கமாக குஜராத் திகழ்கிறது. குஜராத் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.