சென்னை

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் 5 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டது.   இந்த ஆணையம் மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க அப்போது உத்தரவிடப்பட்டது.  ஆறுமுகசாமி ஆணையம் 154 பேரிடம் விசாரணை நடத்தியது.

இதற்குப் பதிலாக மருத்துவக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என ஜெயலலிதா மரணத்தின் போது சிகிச்சை அளித்த அப்பலோ நீதிமன்றம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.   இதனால் அப்போது ஆணைய விசாரணை நிறுத்தப்பட்டது.   உச்சநீதிமன்றம் தற்போது எய்ம்ஸ் மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.

நேற்றுடன் ஆறுமுக சாமி ஆணையத்தின் பதவிக் காலம் முடிவடைந்தது. அரசுக்கு ஏற்கனவே ஆணையம் ஐந்து மாதம் நீட்டிப்பு கோரி கடிதம் அனுப்பி இருந்தது.  இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 5 மாதங்கள் அதாவது ஜூன் 24 வரை நீட்டித்து உத்தரவு இட்டு அதை அரசாணை இதழில் வெளியிட்டுள்ளது.