அருள்நிதி நடிக்க விஜய் கே ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் டி பிளாக் திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று ரிலீசானது, இதனை இயக்குனர்கள் நெல்சன் திலிப்குமார், லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டனர்.

புதுமுகம் அவந்திகா கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரோன் யோஹன் இசை அமைத்திருக்கிறார்.

MNM Films நிறுவனத்தின் சார்பாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரித்துள்ள ‘டி பிளாக்’ படத்தில் உமா ரியாஸ், ‘தலைவாசல்’ விஜய், கரு.பழனியப்பன், லல்லூ, கதிர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.