கைது செயப்பட்ட மாலத்தீவு துணை அதிபரிடம் தூத்துக்குடி அருகே தொடர்ந்து விசாரணை

Must read

தூத்துக்குடி

மாலத்தீவு துணை அதிபர் அகமது அதீப் காபர் சரக்கு கப்பலில் தப்பி வந்த போது தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டு விசாரணை செய்ய்ப்பட்டு வருகிறார்.

மாலத்தீவுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை சரக்கு கப்பல் மூலம் அனுப்புவது வழக்கமாகும்.  அவ்வாறு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கடந்த 11 ஆம் தேதி கற்களை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்குக் கப்பல் மாலத்தீவுக்குச் சென்றுள்ளது.  இந்த கப்பலில் 8  இந்தோனேசியர் மற்றும் ஒரு தமிழர் சென்றனர்.

இந்த கப்பல் கற்களை இறக்கி வைத்துவிட்டுக் கடந்த 27 ஆம் தேதி திரும்பியது.   நேற்று இந்தக் கப்பல் தூத்துக்குடிக்கு திரும்பி உள்ளது.  இந்தக் கப்பலைக் குடியேற்ற அதிகாரிகள் சோதனை இடும் போது இங்கிருந்து சென்ற ஊழியர்கள் 9 பேரைத் தவிர ஒருவர் அதிகமாக இருந்தது தெரிய வந்தது.  அவர் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபரான அகமது அதீப் காபர் என தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலத்தீவின் முன்னாள் அதிபர் யாமின் கியூம் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக எழுந்த வழக்கில் அகமது அதீப் காபருக்கு 33 ஆண்டுக் கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   அவர் கடந்த   4 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  தற்போது தூத்துக்குடிக்கு 500 கிமீ தூரத்தில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் காபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம்  தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

More articles

Latest article