சென்னை மழையால் சர்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதம்

Must read

சென்னை: 
னமழை எதிரொலியாகச்  சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள்  தாமதம் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் விடிய விடியப் பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னையில் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் 2 பக்கங்களும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழை எதிரொலியாகச்  சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள்  தாமதம் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில், 13 சர்வதேச விமானங்கள் உள்பட சுமார் 59 விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு வரும் நேரம் தாமதமாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article