ஆரோக்ய சேது செயலி : நிதி அயோக் அதிகாரி மீது ஆர் எஸ் எஸ் துணை அமைப்பு புகார்

Must read

நாக்பூர்

ரோக்ய சேது செயலி மூலம் நிதி அயோக் அதிகாரி தவறான தகவல்கள் தருவதாக பாஜக துணை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புகார் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கண்டறிய மத்திய அரசு உருவாக்கி உள்ள ஆரோக்ய சேது செயலி மீது தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  இந்த செயலி மூலம் இந்தியர்களின் தனித் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதாகக் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.   ஆனால் இந்த செயலியால் மக்களின் தகவல்கள் கசிய வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்தது.

பிரான்சை சேர்ந்த எலியட் ஆல்ட்ர்சன் என்னும் பெயர் கொண்ட பிரபல ஹேக்கர்  ராகுல் காந்தியின் புகார் சரியானது எனத்  தெரிவித்தார். அவர் ஆரோக்ய சேது செயலியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சுமார் 9 கோடி இந்தியர்களின் தகவல்கள் பரி போகலாம். எனவும்  இவ்வாறு தகவல்களைக் கசிய விட வாய்ப்பு அளிப்பது மிகவும் தவறானது எனத் தெரிவித்தார்.

ஆனால் இதை தவறானது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்தார். இந்தச் செயலிக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பாஜக அமைச்சர்கள் பிரசாரம் செய்து வ்ருகின்றன்ர்.  மேலும் இந்த செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தாதது குற்றச் செயல் என உ பி அரசு தெரிவித்தது  இந்த செயலியைக் குறித்து நிதி அயோக் தலைமை அதிகாரி அமிதாப் காந்த் ஒரு டிவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

அந்த செய்தியில் அவர், “ஆரோக்ய சேது செயலி தற்போது ஆன்லைன் மருத்துவ ஆலோசனை (குரல் மற்றும் வீடியோ)  வீட்டில் பரிசோதனை, இ மருந்தகம் உள்ளிட்ட பல சேவைகளை அளிக்கிறது.  ஆரோக்ய சேது மித்ர என்னும் புதிய அமைப்பு இந்த வசதிகளை நிதி அயோக் மற்றும் பிரின்ஸ் சைன்ஸ் அட்வைஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்குகிறது.” எனத் தெரிவித்தார்

இதற்கு ஆர் எஸ் எஸ் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரண் மன்ச் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி மகாஜன், “மரியாதைக்குரிய மோடி ஜி,  நிதி அயோக் அதிகாரி ஆரோக்ய சேது மூலம் இ மருந்தக செயல்பாடுகளை ஊக்குவிக்கிறார்.  இவை சட்டப்படி இந்தியாவில் இயங்கக் கூடாது.   சீன வைரஸுக்கு எதிராகப் போரிடும்  செயலியில் இவ்வாறு வெளிநாட்டு இ மருந்தக சேவை அளிப்பது துரதிருஷ்ட வசமானது” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article