டெல்லி:
ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 1,273 பேர் குணமடைந்து இருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், மனதஙர மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 1,273 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,540 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால் கொரோனா மீட்பு விகிதம் 29.36% ஆக அதிகரித்துள்ளது.
இதரை 1,886 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை தேவைக்காக நாடு முழுவதும்   5,231 ரயில் பெட்டிகளை கரோனா தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் தேவைப்படும் 215 இடங்களில் வைக்கப்படும்.
கொரோனா தடுப்பு தொடர்பான பிளாஸ்மாவின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடு வதற்கு  ஐசிஎம்ஆரின் இரண்டாம் கட்ட திறந்த-லேபிள் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை  தேசிய நெறிமுறைக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதன் கீழ், ஐ.சி.எம்.ஆர் 21 மருத்துவமனைகளில் சோதனை நடத்துகிறது
ஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகையைப் பற்றி கூறியவர், நாமும் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
தேவையானவை மற்றும் செய்யக்கூடாதவைகளை நாம்  பின்பற்றினால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது,  தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் செயல்முறைகளைப் பின்பற்றா விட்டால் வழக்குகளில் ஸ்பைக் காண எப்போதும்போல அதிகரிக்கும்  வாய்ப்பு உள்ளது
தற்போதைய சூழலில்  நாட்டில் 216 மாவட்டங்களில் கொ ரோனா தொற்று இல்லை.
42 மாவட்டங்களில் கடந்த 28 நாள்களில் கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை
29 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் புதிய வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
36 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிய வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
46 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களில் புதிய வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.
வரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா ,
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 222 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.