பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அர்ஜுன மூர்த்தி, ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

சில நாட்களில் தனது உடல்நிலையை காரணம் காட்டி, தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார்.

அவரது மக்கள் மன்றத்தில் மாவட்ட நிர்வாகிகளாக இருந்தவர்கள், வேறு கட்சிகளில் இணைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அர்ஜுன மூர்த்தி, இன்று தனது அரசியல் நிலை குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர், அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என கூறப்படுகிறது.

“ரஜினிகாந்த் கட்சி தொடங்காவிட்டாலும், அவர் தான் தனது தலைவர்” என்று குறிப்பிட்டுள்ள அர்ஜுன மூர்த்தி “தனது அரசியல் செயல்பாடுகளில். ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்த மாட்டேன்” என உறுதிபட தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]