அரஜூன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி!

கோவை,

குடும்ப பிரச்சினை காரணமாக  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருபவர் அர்ஜூன் சம்பத். இவருக்கு மனைவு மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

அர்ஜுன் சம்பத்தின் மனைவி சுப்பு ரத்தினம். இவர் கோவை அருகே அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய்க்கும், மகனுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, சுப்பு ரத்தினம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அவரது உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


English Summary
Arjun Sampath's wife suicide attempt