1978 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பிபா உலகக் கோப்பை பட்டத்தை வென்ற அர்ஜென்டினா அணி, 1993 ம் ஆண்டுக்குப் பின் இன்று நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அணியின் பெருமையை நிலைநாட்டி இருக்கிறது.

மைதானத்திற்குள் நுழையும் இரு அணி வீரர்கள்

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பிரேசில் அணிக்கு எதிராக ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கோப்பையை வென்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் 22 வது நிமிடத்தில் கோல் அடித்த அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியா

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையே நடக்கும் கோபா அமெரிக்கா போட்டியில் 15 முறை பட்டம் வென்ற உருகுவே-வின் சாதனையை அர்ஜென்டினா அணி சமன் செய்திருக்கிறது.

ஆட்டம் முடிந்ததாக நடுவர் விசில் அடித்ததும் லியோனல் மெஸ்ஸி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணம்

இரு தினங்களுக்கு முன் அர்ஜென்டினா அதிபருடன் உரையாடிய போது தங்கள் அணி 5 – 0 என்ற கோல் கணக்கில் வெல்லும் என்று பிரேசில் அதிபர் போல்சானரோ பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கோப்பையை வாங்கிய சந்தோசத்தில் அதை முத்தமிடும் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணி ஒலிம்பிக் போட்டிகளில் 2004 மற்றும் 2008 ம் ஆண்டு என இருமுறை தங்கப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோப்பையுடன் அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர்கள்

அர்ஜென்டினா கால்பந்து அணியின் சாதனைப் பட்டியல் :

அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி முதல் முறையாக மிகப்பெரிய போட்டி ஒன்றில் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.