தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் பிரேசில் அணியை 0 – 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வீழ்த்தியது.

10 வது முறையாக கோப்பையை வெல்லும் கனவோடு ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த இறுதிப் போட்டியில் களமிறங்கிய பிரேசில் அணியின் கனவை ஆட்டம் துவங்கிய 22 வது நிமிடத்தில் அர்ஜென்டினாவில் ஏஞ்சல் டி மரியா அடித்த கோல் மூலம் தகர்த்தார்.

ஆட்டத்தின் முதல் பாதியிலேயே கோல் அடித்த அர்ஜென்டினா ஆட்ட நேர முடிவு வரை தனது முன்னிலையை தக்கவைத்துக் கொள்வதற்காகவே தடுப்பாட்டம் ஆடியது.

படங்கள் நன்றி : சோனி LIV

 

இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா 15 வது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்று உருகுவேவின் சாதனையை சமன் செய்தது.

படங்கள் நன்றி : சோனி LIV

1993 ம் ஆண்டுக்குப் பின் அர்ஜென்டினா அணி வெற்றி பெரும் மிகப்பெரிய பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.