விஜய்க்கு நீ போட்டியா?:  விஷாலை விளாசிய தாணு

Must read

திரைப்ட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் களைகட்டி வருகிறது. இன்று விஷாலை போட்டுத்தாக்கிவிட்டார் கலைப்புலி தாணு.  ஏற்கெனவே  அவர் பே(ஏ)சியதை வெளியிட்டிருந்தோம்.

இப்போது

கொசுறு!

“தம்பி விஷால்…. தயாரிப்பாளர்களை என்னன்னு நெனச்சிக்கிட்டிருக்கே.. ?  அவங்களை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு?  1200 உறுப்பினர்களோட,  மிக மரியாதைக்குரிய அமைப்பாக செயல்படுற தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சிக்க  நீ  யார்?

உன்னால் உன் தந்தை தயாரிப்பாளர் ஜிகே ரெட்டிக்கே அவமானம்.

உன்னால் எத்தனை தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள்… நினைச்சிப்பார்த்திருக்கியா ?

யாருகிட்டயும் கை நீட்டி நிற்காத.”செல்லமே” தயாரிப்பாளர் உன்னால் பட்ட பாடு  நினைவில்லையா? மத கஜ ராஜா என்ற படத்தை எடுத்துட்டு  நடுத் தெருவுக்கு வந்துவிட்ட ஜெமினி நிறுவனத்தை நினைச்சுப்பாரு!” என்ற தாணு, “இளையதளபதி என விஜய்க்குப் பட்டம் சூட்டினால், நீ புரட்சித் தளபதி என்று போட்டுக் கொள்கிறாய்… ! அவர் புலி என்று படமெடுத்தால், நீ பாயும் புலி என்று படமெடுக்கிறாய்.. அவ்வளவு விஷமத்தனம்… கெட்டம் எண்ணம்!” என்று குமுறித்தள்ளிவிட்டார் தாணு.

More articles

Latest article