சென்னை:  பெரும்பான்மை இன்றி தவிக்கும் தவெகவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் இன்று அறிவிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், மாநிலத்தில் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.  அது கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் உருவாகி உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், தமிழகத்தில் விஜய்  ஆட்சியமைக்க காங்கிரஸ் (Congress) கட்சி சில நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்தது. சட்டமன்றத்தில் மட்டுமின்றி அடுத்து வரவுள்ள உள்ளாட்சி, மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களிலும் த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் அறிவித்தது.

தவெக வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. இதைக்கொண்டு ஆட்சி அமைக்க தவெக முயற்சித்த நிலையில், கவர்னர் ஆட்சி அமைக்க 118 பேரின் விவரம் தேவை என கூறி,  பதவி ஏற்க அனுமதி மறுத்து விட்டார்.

இதையடுத்து, திமுக, அதிமுக கட்சிகளின் ஆதரவை பெறுவதில் தயக்கம் காட்டி வரும் தவெக தலைவர் விஜய், அதன் கூட்டணி கட்சிகளுக்கு வலைவீசி வருகிறார். இதுதொடர்பாக திரைமறைவு குதிரை பேரங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக, திமுக கூட்டணி கட்சிகளாக விசிக, கம்யூனிஸ்டு, முஸ்லிம் கட்சிகள் போன்றவை திமுக தலைவர் அனுமதி அளித்தால், தவெகவுக்கு ஆதரவு வழங்குவோம் என கூறி வருகின்றன. இதையடுத்து, கூட்டணி கட்சி தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தும் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர்,  தவெகவிற்கு ஆதரவு கொடுப்பது குறித்து, திமுக கூட்டணியில் உள்ள   3 கட்சிகளும் ஒத்த முடிவாக நாளை அறிவிப்போம் என தெரிவித்தார்.

அதிமுக – திமுக கூட்டணி அமைப்பது குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அது இன்னும் முழு உருவம் பெறவில்லை. அப்படி பெற்றால் பார்க்கலாம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு மேலாக இடதுசாரிகளுடன் ஒன்றாக இணைந்து பயணித்து வரும் சூழ்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையில் இடதுசாரிகளுடன் ஒன்றாக இணைந்து முக்கிய முடிவு ஒன்றை எடுக்க உள்ளோம்.

இடதுசாரி கட்சியினர் நாளை அவர்களது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதுபோல, நாங்கள் எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளோம். இடதுசாரிகளின் முடிவை தொடர்ந்து, நாங்கள் எங்கள் முடிவை தெரிவிப்போம். இந்த முடிவு விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளின் ஒத்த முடிவாக இருக்கும்” என்றார்.

ஆனால், தவெக தலைவர் விஜய் தனிப்பெரும்பான்மை பெற்றும், ஆட்சிக்கு தேவையான 118 வேட்பாளர்கள் குறித்து ஆவணங்கள் கேட்கின்றனர். இது விஜய்க்கு கொடுக்கப்படும் அழுத்தமாக தமிழக மக்களும், நாங்களும் பார்க்கிறோம். காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைத்திருப்பது, இந்த அழுத்தத்திற்கு ஒரு காரணமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

[youtube-feed feed=1]