புதுச்சேரி: பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? என முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதுச்சேரி அரசு கொறடா ஆறுமுகம் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் என்ஆர் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட்டு 10 தொகுதிகளிலும், பாஜக 9 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. எதிர்த் தரப்பில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து 13 இடங்களில் போட்டியிட்ட திமுக 6 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சுயேச்சை வேட்பாளர்கள் 6  இடங்களில் வெற்றி பெற்றதால், அங்கு ஆட்சி அமைப்பதிலேயே ஏராளமான சிக்கல்கள் எழுந்தன.

இதையடுத்து சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக, என்ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்ற நிலையில், அமைச்சர்கள் நியமனத்திலேயே இரு கட்சிகளுககும் இடையே மோதல் நீடித்தது. இதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக அமைச்சர்கள் நியமனம் செய்ய முடியாமல் ரங்கசாமி தவித்தார். பின்னர் பாஜக தலைவர்களை சந்தித்து பேசி ஒருவரியாக அமைச்சரரைவை பதவ ஏற்றது. இருந்தாலும், அங்கு அவ்வப்போது இரு கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நீட்டித்து வருகிறது.  பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராகி கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இரு கட்சியினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. என்ஆர்.காங்கிரசை பாஜக விமர்சிப்பதும், பாஜகவை என்ஆர் காங்கிரஸ் விமர்சிப்பதும் தொடர்ந்து வருகிறது. சமீப காலமாப பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக செயல்பட்டு வருவது கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு  பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன் சட்டப்பேரவை வாசலில் அமர்ந்து திடீர்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது  புதுச்சேரி அரசுக்கு எதிராக  பேசிய அங்காளனுக்கு ஆதரவாக  பாஜக எம்.எல்.ஏவும்  அதே இடத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய பாஜக எம்எல்எ, புதுச்சேரியில் பாஜக வளர்வது ரங்கசாமிக்கு பிடிக்கவில்லை. மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது ஊழல் நடந்து இருக்கிறது. அதனால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும். பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறியதுடன், இதுதொடர்பாக  அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்ப்பட்டு வருவதாக கூறியவர், புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் அமித்ஷாவிடம் வலியுறுத்துவோம் என்றவர், கூடுதலாக,  என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பாஜக ஆட்சிக்கு வருவதையே விரும்புகிறோம்.” என்றார். அதுபோல, பாஜக எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசுகையில், “முதலமைச்சர் ரங்கசாமி தன்னை சுற்றியுள்ள நபர்கள் சொல்வதையே கேட்கிறார்.” என்றார்.

பாஜக எம்.எல்.ஏக்களின் இந்த பேச்சு என்.ஆர்.காங்ரிசாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பாஜகவை கூட்ணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி அரசு கொறடா ஆறுமுகம், பாஜக எம்எல்ஏக்கள், தங்களது  பதவியை ராஜினாமா  மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.  இதனால் இரு தரப்பினருக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

கூட்டணி கட்சியினரே ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருவதால், அங்கு ரங்கசாமி தலைமையிலான ஆட்சி விரைவில் கவிழும் நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.