இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் SJ சூர்யா ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார்.

இதில் SJ சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும், கதிர் கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இன்று (அக்.9)ம் தேதி படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கியது. SJ சூர்யா-வின் புதுப்படம் தொடங்கியுள்ளதையடுத்து, பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கி ஒரே கட்டமாக முடித்து வரும் 2020 பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.