சென்னை: மக்களவை  தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ( 17ந்தேதி) மாலை 6மணியுடன்  நிறைவடைந்தது.  இதைத்தொடர்ந்து, நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாட்டில் நாளை (19ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, 48 மணி நேரத்திற்கு முன்னதாக, தேர்தல் பிரசாரம் 17ந்தேதேதி மாலையுடன் நிறைவடைந்தது.  நேற்று சென்னையில் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்ட முதலமைச்சர் பிரசாரம் முடிவடைந்ததும்,   இரவு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின்,  கடந்த  மார்ச் மாதம் 22-ம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து  தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.  நேற்று கடைசி நாள் பிரசாரம்  சென்னையின் மூன்று தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் இரவு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்குள்ள மறைந்த முதல்வரும், அவரது தந்தையுமான கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் அவரது மகனும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில் தேர்தலில் தங்களுக்கு முழு வெற்றி கிடைக்க வேண்டும் என்று தந்தையின் நினைவிடத்தில் ஸ்டாலின் வேண்டிக்கொண்டதாக திமுக பிரமுகர்கள் தெரிவித்தனர்.