பாட்னா: பீகார் மாநிலத்தில், பங்கரா காட் மகாசேது பாலத்திற்கான இணைப்புச் சாலை திறக்கப்படுவதற்கு சிலமணி நேரம் முன்னதாகவே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதனையடுத்து, மாநில முதல்வர் நிதிஷ்குமார் மீது விமர்சனங்கள் பாய்ந்துள்ளன. அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், லல்லு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளதாவது, “புதிய திட்டங்களை திறந்துவைப்பதில்தான் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எப்போதுமே ஆர்வம்” என்றுள்ளார்.

சரண் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு அதிகரித்த காரணத்தால், பங்கரா காட் மகாசேது பாலத்திற்கு செல்லும் இணைப்புச் சாலை அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.