சென்னை:  ஆஸ்கர் விருதை வென்ற யானை பாகன் தம்பதிகளின நீலகிரி பெள்ளிக்கு பணி நியமன ஆணை, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு புதிய வாகன சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் ரூ.23.84 கோடி மதிப்பில் 253 வாகனங்களை ஊரக வளர்ச்சி அலுவலர்களின் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள திருமதி வி. பெள்ளி அவர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் காட்டுநாயகன் சமூகத்தைச் சேர்ந்த யானை பாகன் தம்பதியான பொம்மன் – பெள்ளியின் உண்மை கதையை வெளிக்கொண்டு வந்த ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றதை அடுத்து, யானை பாகன் தம்பதியை தமிழ்நாடு அரசு ஏற்கனவே கவுரவித்தது. இந்த நிலையில், தற்போது பெள்ளிக்கு அரசு பதவி வழங்கி மேலும் கவுரவம் செய்துள்ளது.