இந்திய கடலோர காவல்படையில் பெண்கள் குறுகியகால பணிகளுக்கு மட்டுமே பணியமர்த்தப்படுவதாகவும் அவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கடலோர காவல்படை அலுவலர் ப்ரியங்கா தியாகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜெ பி பரித்வாலா, மனோஜ் திவாரி அடங்கிய பெஞ்சு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

பெண்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு நிரந்தர பணி வழங்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு இதை செய்யத் தவறினால் உச்சநீதிமன்றம் முன்வந்து நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.