பெங்களூர்,

ர்நாடக தலைநகர் பெங்களூரில் ஆப்பிள் கம்பெனியின்  ஐபோன் தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது.

இந்த தகவலை கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங் கார்ஜ் உறுதி செய்துள்ளார்.

அவர் கூறியதாவது,

பெங்களூரில் ஐபோன்கள் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.. உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது முதற்கட்ட உற்பத்தியை  இங்கு தொடங்க வுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கர்நாடகாவில் ஆப்பிள் நிறுவனம் அமைவது கர்நாடகாவுக்கு கூடுதல் மதிப்பை தருகிறது. மேலும், வரும் ஜூன் மாதம் முதற்கட்ட உற்பத்தி தொடங்கப்படலாம் என்றும் பிரியங் கார்ஜ் தெரிவித்தார்.

இதன் மூலம், உலகளவில் ஐபோன் பாகங்களை ஒருங்கிணைக்கும் (Assemble) மூன்றாவது நாடாக இந்தியா சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக, ஐபோனுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் விஸ்ட்ரான் நிறுவனம் பெங்களூருவி–்ல் அசெம்ளி செய்யும் தொழிற்சாலை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உற்பத்தியால் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. அதேவேளையில், ஆப்பிள் நிறுவனம்  30 சதவீத உதிரி பாகங்களை இந்தியாவில் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரியுள்ளது.

மேலும் இறக்குமதி மற்றும் உற்பத்தி வரி குறைப்பு உள்ளிட்ட வரிச்சலுகைகளை அளிக்க வேண்டும் என இந்நிறுவனம் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.